search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளை பொருட்கள்"

    • ஏலத்தில் மொத்தம் 30 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.
    • விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.80 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.

    இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் 5,689 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 2,506 கிலோ. விலை கிலோ ரூ.18.25 முதல் ரூ.27.20 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.26.80.13 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 286 கிலோ. விலை கிலோ ரூ.60.90 முதல் ரூ.83.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.81.15.

    ஏலத்தில் மொத்தம் 30 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.86 ஆயிரம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • தற்போதைய சூழலில், எந்தவொரு விளைபொருளுக்கும் கட்டுபடியாகும் விலையில்லை.
    • மாநிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் அதிகளவில் சந்தைக்கு வரும் வாய்ப்பு ஏற்படும்.

    குடிமங்கலம்,

    உடுமலை, குடிமங்கம் மற்றும் மடத்துக்குளம் உள்ளிட்ட நீர்ப்பாசனம் அதிகம் உள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர், நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.

    இருப்பினும் நடப்பு வைகாசி பட்டத்தில் தேங்காய், சின்ன வெங்காயம் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. விவசாயிகளிடம் இருந்து ஒரு தேங்காய் 5.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ சின்ன வெங்காயம்20 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளனர்.அதே நேரம் யூரியா தவிர பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபடுவதை விவசாயிகள் பலர் தவிர்த்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தற்போதைய சூழலில், எந்தவொரு விளைபொருளுக்கும் கட்டுபடியாகும் விலையில்லை. ஆனால் அனைத்து உரங்களின் விலையும் கணிசமான அளவு உயர்ந்து விட்டது.இதனால் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியை குறைத்துக்கொண்டுள்ளனர். பல ஏக்கர் நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளன.எனவே, உரத்தின் விலையை, அரசு இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். சாகுபடி பரப்பு குறைவதால்கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் அதிகளவில் சந்தைக்கு வரும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×